#BREAKING திடீர் பரபரப்பு.. மம்தா பானர்ஜி முதலில் வெற்றி என அறிவித்துவிட்டு தற்போது தோல்வி என அறிவிப்பு !
#BREAKING திடீர் பரபரப்பு.. மம்தா பானர்ஜி முதலில் வெற்றி என அறிவித்துவிட்டு தற்போது தோல்வி என அறிவிப்பு !

இரண்டு முறை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி மீண்டும் தொடர்சியாக 3ஆவது முறையாக அரியணையில் ஏற போராடினார். ஆனால் பாஜக இந்த முறை அங்கு ரவுண்ட் கட்டி வேலை பார்த்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் அங்கு முகாமிட்டனர்.
இதனால் மேற்குவங்கம் எப்போதும் பரபரப்பாகவே காணப்பட்டது. இதனிடையே மம்தாவின் நம்பிக்கை நட்சதிரமாக இருந்த சுவேந் அதிகாரி திடீரென அவரை பிரிந்து பாஜகவில் இணைந்தார். இது அவரது கட்சிக்கு பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தியது. எனினும் சுவேந்த் அதிகாரி, மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட தயாரா என சவால் விட்டார். அதனை ஏற்ற மம்தா பானர்ஜி அத்தொகுதியில் சென்று போட்டியிட்டார்.

இந்தநிலையில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. சிறிது நேரத்தில் அங்கு மம்தா பின்னடைவை சந்தித்தார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை வசிக்த்த அவர் தற்போது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தனது முன்னாள் ஆதரவாளரான பாஜக வேட்பாளர் சுவேந்த் அதிகாரியை 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் எனவும் அறிவிக்கப்பட்டது.
நந்திகிராம் தொகுதியில் முதலில் வெற்றி என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பப்பாக முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பை ஏற்பதாக கூறிய மம்தா பானர்ஜி, முதலில் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு பின்னர் சில தில்லுமுல்லு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அதனை நான் வெளிப்படுத்துவேன் எனவும் கூறியுள்ள மம்தா, நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் கூறினார். எனினும் அங்கு மம்தா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
newstm.in

