BREAKING: முதல்வர் அலுவலகத்தில் திடீர் தீ.. விரைந்து வந்த வீரர்களால் சேதம் தவிர்ப்பு..!
BREAKING: முதல்வர் அலுவலகத்தில் திடீர் தீ.. விரைந்து வந்த வீரர்களால் சேதம் தவிர்ப்பு..!

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில், மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏசியில் ஏற்பட்ட மின் இணைப்பு பிரச்னையால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story

