#BREAKING:- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி! முதல்வரிடம் நேரில் வழங்கினார்!
#BREAKING:- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி! முதல்வரிடம் நேரில் வழங்கினார்!

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.இருந்த போதிலும் பாதிப்புக்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் , தடுப்பு மருந்துகள், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிர தடுப்புப்பணியில் களத்தில் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக மக்கள் உதவி அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக வங்கி கணக்கு எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.பலரும் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்காக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதி வழங்கினார். மேலும், கொரோனாவை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய், இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய், கவிஞர் வைரமுத்து,திமுக எம்.எல்.ஏ.க்கள், சௌந்தர்யா ரஜினிகாந்த் ,நடிகர் சிவக்குமார் குடும்பம் , நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஜெயம் ரவி, சக்தி மசாலா நிறுவனம், ஜிஆர்டி குழுமம் , Zoho கார்ப்பரேஷன் , திமுக அறக்கட்டளை , விஜயகாந்த் என பலரும் நிதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

