Theme Check

#BREAKING டி20 உலகக்கோப்பை.. இந்தியா முதலில் பேட்டிங் !!

#BREAKING டி20 உலகக்கோப்பை.. இந்தியா முதலில் பேட்டிங் !!

#BREAKING டி20 உலகக்கோப்பை.. இந்தியா முதலில் பேட்டிங் !!
X

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதன் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் பங்கேற்றுள்ள 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

இதில், குரூப் 2வில் இடம்பெற்றுள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை பெரும் ஆவலுடன் எதிர்பாத்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மற்ற தொடர்களில் விளையாடாமல், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டும் மோதுகிறது.இதனால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் போடப்பட்டுள்ளது.

இதில் டாஸ் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

newstm.in

Tags:
Next Story
Share it