Theme Check

#BREAKING: டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள்.. வீடியோ !!

#BREAKING: டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள்.. வீடியோ !!

#BREAKING: டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள்.. வீடியோ !!
X

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் மூலத்தில் கொண்டுச்செல்லப்பட்ட தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டெல்லி சென்றடைந்தன.

டெல்லி சென்றதும் ராணுவ வீரர்கள் உரிய ராணுவ மரியாதையுடன் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் எடுத்துச்சென்றனர். அங்கு பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

army

முன்னதாக, இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளைபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதிநேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பின்னர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.


newstm.in

Next Story
Share it