Theme Check

BREAKING: தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு !

BREAKING: தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு !

BREAKING: தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு !
X

காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்து காணமடைந்த சிறுவன் புகழேந்தி 5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தான்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

pugalenthi

அப்போது ஒரு துப்பாக்கி குண்டு சுமார் 2 கி.மீ. தூரம் தொலைவிற்கு பாய்ந்து சென்றது. நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின்(11) தலையின் இடதுபுறத்தில் அந்த குண்டு பாய்ந்தது. இதில் சிறுவன் மயக்கமடைந்து விழுந்தான்.

இதனை கண்டு சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்ட போலீசார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவக்குழுவினர் கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டை அகற்றினர்.

pugalenthi

சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. CISF வீரர்கள் துப்பாக்கிசுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி(11) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனால் சிறுவனின் பெற்றோர், கிராமத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it