#BREAKING:- கிணற்றை காணோம் புகழ் "நெல்லை சிவா" காலமானார் !!
#BREAKING:- கிணற்றை காணோம் புகழ் "நெல்லை சிவா" காலமானார் !!

"கிணத்தை காணோம்" காமெடி புகழ் நெல்லை சிவா, இன்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
நெல்லை மாவட்டம், பணக்குடி அருகே, வேப்பிலாங்குளத்தை சேர்ந்தவர் நெல்லை சிவா.வடிவேலு உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி 'கிணற்றை காணோம்' பட்டிதொட்டி எல்லாம் பரவி நல்ல வரவேற்பை பெற்றது.நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தவர். 80களில் நடிக்க தொடங்கி தற்போது வரை குணச்சித்திர நடிகராக, காமெடியனாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் நெல்லை சிவா அவர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை. திருநெல்வேலி மாவட்டம் அவரின் சொந்த ஊரான பணகுடியில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமாகியுள்ளார்
அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரின் அண்ணன் பிள்ளைகள் இறுதி சடங்குகளை நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

