#BREAKING: நாளை பொது விடுமுறை.. முதல்வர் அறிவிப்பு..!
#BREAKING: நாளை பொது விடுமுறை.. முதல்வர் அறிவிப்பு..!

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவுநாளையொட்டி, பஞ்சாப்பில் நாளை (23-ம் தேதி) அரசு பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
நாளைய தினம் பஞ்சாப் மக்கள், பகத் சிங் பிறந்த ஊரான ஷகீத் பகத் சிங் நகர் மாவட்டம் காத்கர் காலனுக்குச் செல்லும் நோக்கில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பகவந்த் மான் தெரிவித்தார்.

முன்னதாக, பகத் சிங் பிறந்த காத்கர் காலனில்தான் பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக, பஞ்சாப் அரசு அலுவலகத்தில் முதல்வரின் படத்திற்கு பதிலாக அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், பகத் சிங்கின் நினைவு நாள் பஞ்சாப் மாநிலத்தில் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

