Theme Check

#BREAKING:- மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் ?

#BREAKING:- மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் ?

#BREAKING:- மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் ?
X

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த நிலையில் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற்றது.
ஐபிஎல் 14-ஆவது சீசன் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. கொரோனா அச்சம் காரணமாக பலத்த பாதுகாப்புடன் ரசிகர்களுக்கு அனுமதியின்றி போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த ஐ.பி.எல். சீசனில் 29 ஆட்டங்கள் முடிந்திருந்தது. 31 ஆட்டங்கள் இன்னும் எஞ்சியுள்ள நிலையில் வீரர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பர் மாதம் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து இறுதி முடிவு செய்யப்படும் எனவும் ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக என தகவல் வெளியாகியுள்ளது. மீதியுள்ள 31 போட்டிகளும் 21 நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Tags:
Next Story
Share it