#BREAKING மம்தா பானர்ஜி வெற்றி.. சவாலை நிறைவேற்றி பாஜகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தினார் !!
#BREAKING மம்தா பானர்ஜி வெற்றி.. சவாலை நிறைவேற்றி பாஜகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தினார் !!

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மேற்கு வங்க தேர்தல். இரண்டு முறை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி மீண்டும் தொடர்சியாக 3ஆவது முறையாக அரியணையில் ஏற போராடினார். ஆனால் பாஜக இந்த முறை அங்கு ரவுண்ட் கட்டி வேலை பார்த்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் அங்கு முகாமிட்டனர்.
இதனால் மேற்குவங்கம் எப்போதும் பரபரப்பாகவே காணப்பட்டது. இதனிடையே மம்தாவின் நம்பிக்கை நட்சதிரமாக இருந்த சுவேந் அதிகாரி திடீரென அவரை பிரிந்து பாஜகவில் இணைந்தார். இது அவரது கட்சிக்கு பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தியது. எனினும் சுவேந்த் அதிகாரி, மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட தயாரா என சவால் விட்டார். அதனை ஏற்ற மம்தா பானர்ஜி அத்தொகுதியில் சென்று போட்டியிட்டார்.

அதன்பின்னர் தொகுதி நிலவரம் மாறியதாகவும் மம்தா தோற்பார் எனவும் கருத்துகள் பரவின. இந்தநிலையில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. சிறிது நேரத்தில் அங்கு மம்தா பின்னடைவை சந்தித்தார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை வசிக்த்த அவர் தற்போது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தனது முன்னாள் ஆதரவாளரான பாஜக வேட்பாளர் சுவேந்த் அதிகாரியை 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதேபோல் அங்கு மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. பாஜக 77 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
newstm.in

