#BREAKING விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் பரபரப்பு !!
#BREAKING விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் பரபரப்பு !!

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனரும் நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தனது மனுவில் தெரிவித்தள்ளார்.

முன்னதாக, தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவிற்கும் தடை விதிக்க கோரி நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் உயர்நீதின்றத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

