பட ஷூட்டிங் நடத்த லஞ்சம்? - நடிகர் கார்த்தி- அதிதி நடிக்கும் படக்குழு மீது பரபரப்பு புகார் !

பட ஷூட்டிங் நடத்த லஞ்சம்? - நடிகர் கார்த்தி- அதிதி நடிக்கும் படக்குழு மீது பரபரப்பு புகார் !

பட ஷூட்டிங் நடத்த லஞ்சம்? - நடிகர் கார்த்தி- அதிதி நடிக்கும் படக்குழு மீது பரபரப்பு புகார் !
X

நடிகர் கார்த்தி, பிரமாண்ட இயக்குநர் சங்கர் மகள் அதிதி இணைந்து நடிக்கும் படம் விருமன். இந்த திரைப்படத்தை முத்தையா இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கை நடத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பி வழியும் நிலையில், வைகை அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றைக் கடக்கும், குளிக்கவும், துணி துவைக்கவும், ஆடு மாடுகளை குளிப்பாட்டுவதும் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

aditi shankar

அதேபோல் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் தேனி மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் கடந்த வாரம் வைகை ஆற்றில் வெள்ள கரை புரண்டு ஓடிய நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் நூறு பேருடன் ஷூட்டிங் நடத்த அனுமதி கோரி நடிகர் கார்த்தியின் விருமன் படக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் முரளிதரனை அனுகியுள்ளனர்.

ஆனால் அதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்ததாகவும் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அசம்பாவிதங்கள் ஏற்பட எந்த வகையிலும் இடம் அளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்காத விருமன் படக் குழுவினர் பின் வாசலை தட்டி அதை சரிசெய்து பட ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர் என கூறப்படுகிறது.

money

தேனி மாவட்ட பிஆர்ஓ, வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி லஞ்சம் கொடுத்து பட ஷூட்டிங்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் விருமன் பட ஷூட்டிங்கில் நடந்திருக்கும் விதிமீறல் சம்பவம் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it