படப்பிடிப்பின் போது உடைந்த மூக்கு.. பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை !!
படப்பிடிப்பின் போது உடைந்த மூக்கு.. பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை !!

தாய் தந்தையின் பேச்சை மீறி ஆக்சன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை சாரா அலிகானுக்கு படப்பிடிப்பின் போது மூக்கு உடைந்தது.
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான். கேதார் நாத் என்ற இந்திப் படத்தில் அறிமுகமானவர் நடிகை சாரா அலிகான். தற்போது பட்டாலியன் பெண் கமாண்டோ ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்தில் கமாண்டோ வேடத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தாய், தந்தை இருவருடனும் அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால், ஆக்சன் காட்சிகள் என்றால் ஆபத்து இருக்கும் என்று கூறி நடிக்கவேண்டாம் என கூறியுள்ளனர். எனினும் இப்படத்தின் மூலம் தனக்கு எதிர்காலம் கிடைக்கும் என கருதி கிடைக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக சாரா அலிகான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துக்கொண்டார். தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பெற்றோர் அச்சப்பட்டது போலவே அசாமில் நடந்த படப்பிடிப்பின் போது சாரா அலிகானுக்கு மூக்குடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவசர சிகிச்சைக்கு பிறகு மூக்கில் பிளாஸ்திரியுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது மூக்கில் ஏற்பட்டுள்ள வெட்டுக் காயத்தையும் புகைப்படம் மற்றும் வீடியோவாக இன்ஸ்டிராகிராமில் பதிவிட்டுள்ள நடிகை சாரா அலிகான் தனது தாய் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
newstm.in

