Theme Check

மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல்.. பதறவைக்கும் வீடியோ !!

மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல்.. பதறவைக்கும் வீடியோ !!

மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல்.. பதறவைக்கும் வீடியோ !!
X

மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்கும் சம்வம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய 3 சக்கர ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவரை வழியில் தடுத்துநிறுத்திய ஒரு ஆணும், பெண்ணும் சுற்றிவளைத்து பெரிய கட்டையை கையில் வைத்துக்கொண்டு அவரை சரமாறியாக தாக்குகின்றனர்.

attack

பைக்கில் இருந்தவாறே கெஞ்சும் மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் கட்டையால் மாற்றுத்திறனாளியின் பைக்கை அடித்து நொறுக்குகின்றனர்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இது காட்டுமிராண்டுத்தனம் என்றும், மனிததன்மையற்ற செயல் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


இதனையடுத்து, வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், தாக்கிய நபர்களும், அந்த மாற்றுத்திறனாளியும் உறவினர்கள் என்றும், சொத்து தொடர்பான தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it