குடி போதையில் பெற்ற மகள்களையே அடித்துக் கொன்ற கொடூர தந்தை!!
குடி போதையில் பெற்ற மகள்களையே அடித்துக் கொன்ற கொடூர தந்தை!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜு, தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இவருடைய மனைவி தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் இருந்தனர்.

கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் நதியா தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு பிறகும் கோவிந்தராஜ் தனது குடும்பத்தாருடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.
இவருடைய மூத்த மகள் நந்தினி (16) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார், 9 வயது மகள் தீபா நான்காம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் கோவிந்தராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அதனால் மகள்கள் இரண்டு பேரும் கோவிந்தராஜிடம் சண்டை போட்டுள்ளனர். முழு மது போதையில் இருந்த கோவிந்தராஜு மகள்கள் இரண்டு பேரையும் கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்தார்.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜுவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

