Theme Check

பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து கொடூர கொலை.. கணவரின் நண்பர் கைது !!

பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து கொடூர கொலை.. கணவரின் நண்பர் கைது !!

பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து கொடூர கொலை.. கணவரின் நண்பர் கைது !!
X

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டோம்பிவிலியை சேர்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே. திருமணமான இவர் தனது கணவர், மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், அப்பெண்ணை காணவில்லை என அளித்த புகாரில் விசாரணை நடத்தினர். அதன்பேரில், அவரது வீட்டில் சோதனை செய்தப்போது சோபாவிற்குள் சுப்ரியா ஷிண்டே கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்தார்.

அவரது உடலை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே இருந்த காலணியை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் அது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் நண்பரான நவிமும்பையை சேர்ந்த விஷால் தாவார் (வயது28) என்பவரின் காலணி என தெரியவந்தது.

Supriya-Shinde-Murder

ஏனெினில் 2 பேரும் கடையில் ஒரே மாதிரி காலணிகளை வாங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் விஷால் தவாரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, அவர் தான் சுப்ரியா ஷிண்டேவை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

மேலும், சம்பவத்தன்று சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்தார். அவரது மகன் பள்ளிக்கூடம் சென்றிருந்தான். சுப்ரியா ஷிண்டே வீட்டில் தனிமையாக இருந்தபோது விஷால் தாவார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Supriya-Shinde-Murder

அங்கு அவரிடம் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த சுப்ரியா ஷிண்டே கண்டித்து வெளியே செல்லுமாறு கூறினார். இதனையடுத்து விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே உயிரிழந்ததால் உடலை மறைக்க ஷோபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி சென்றதாக தெரியவந்து உள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


newstm.in

Tags:
Next Story
Share it