பட்ஜெட் : 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்!!
பட்ஜெட் : 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்!!

நாடு முழுவதும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் “சிப்” பொருத்திய இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்.
மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக் கொள்வது தொடர்பாக திட்டம் கொண்டு வரப்படும்.
ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்படும்.

நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரே நாடு, ஒரே பதிவு முறையை கொண்டுவர திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறைக்கு தேவையான தளவாடங்களில் 68%ஐ உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும்.
பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை தொடங்கப்படும்.
வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
68% of the capital procurement budget for Defence to be earmarked for domestic industry to promote Aatmanirbharta and reduce dependence on imports of defence equipment. This is up from the 58% last fiscal: FM Nirmala Sitharaman#Budget2022 pic.twitter.com/pQJm3ymlQE
— ANI (@ANI) February 1, 2022
newstm.in

