பட்ஜெட் 2022-23 - முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை ...!!
பட்ஜெட் 2022-23 - முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை ...!!

- மன அழுத்தத்தை குறைக்க தொலைபேசி மூலம் ஆலோசனை
- மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகை.
- குடைக்கான இறக்குமதி வரி 20%ஆக உயர்ந்துள்ளது.
- வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
- வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- மாற்றுத் திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கு வருமான வரியில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது
- ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களும் TDS சலுகை
- ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கான TDS 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும்
- மாநிலங்களுக்கு உதவ 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
- கூட்டுறவு நிறுவனங்கள் செலுத்தும் குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் 15% ஆக குறைக்கப்படும்
- அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிடவும் 35.4% அதிகம்.
- ஆன்லைனில் இணையும் தபால் & வங்கித்துறைகள்.தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி.
- 1.5 லட்சம் அஞ்சலகங்கள், பொதுத்துறை வங்கிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.தபால் துறையை, வங்கிகள் துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை
- மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்யப்படும்
- ஏர் இந்தியா பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
- சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.
- பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்
- விர்ச்சுவல் மூலதன சொத்துக்கள் மீதான வரியில் 1% TDS வழங்கப்படும்
- உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68 சதவீதம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை
- இ பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம்
- 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்
- வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக் கொள்வது தொடர்பாக திட்டம் கொண்டு வரப்படும்.
- ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்படும்.
- நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்
- பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை
- வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை
- ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்
- சிறு குழந்தைகள் நலனுக்காக, நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
- சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரூ.60 ஆயிரம் கோடியில் 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சையளிக்க மையங்கள் உருவாக்கப்படும்
- மத்திய பட்ஜெட்: ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்
- நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்
- 25 ஆண்டுகளை இலக்காகக்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், ``வரும் நிதியாண்டில், உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை வரும்.
- வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
- போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 2023-க்குள் 2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
Next Story

