Theme Check

பட்ஜெட் 2022 – 23 : வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை!!

பட்ஜெட் 2022 – 23 : வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை!!

பட்ஜெட் 2022 – 23 : வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை!!
X

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.

பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுவரி 15%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10%இல் இருந்து 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

govt-employees

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிக அளவில் வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சுமார் ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது.

வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடி. வரவு ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

money

அரசின் நிதி பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4%ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகை.

குடைக்கான இறக்குமதி வரி 20%ஆக உயர்ந்துள்ளது.

வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it