#BUDGET: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி..
#BUDGET: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி..

தமிழக அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசத் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். பேரவையில் பேச அனுமதி அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
அமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்ததும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்தபோதும், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினர் கருத்துகள் எதுவும் அவைக்குறிப்பில் சேர்க்கப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். பட்ஜெட் உரையை கேட்குமாறும் அவர் கோரிக்கை வைத்தார்.
எனினும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தொடர்பான உரையை வாசித்து வருகிறார். சில நிமிடங்களில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது. தொடுதிரை உதவியோடு கணினி முறையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்ததுபோன்று, இந்த ஆண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
newstm.in

