Theme Check

பட்ஜெட் : 2025க்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி!!

பட்ஜெட் : 2025க்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி!!

பட்ஜெட் : 2025க்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி!!
X

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநில மேம்பாட்டுக்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அரசின் மூலதன செலவினங்களுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 35.4% அதிகம்.

money 1

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

rbi

மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it