#BUDGET: மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.. நிதியமைச்சர் அறிவிப்பு..!
#BUDGET: மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.. நிதியமைச்சர் அறிவிப்பு..!

சென்னை தலைமைச் செயலகத்தில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அதன்படி பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36.895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படும். மேலும் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு உயர் கல்வியில் (பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி) சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

