Theme Check

#BUDGET: சமூக ஊடகங்களுக்கு வருகிறது கடிவாளம்.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

#BUDGET: சமூக ஊடகங்களுக்கு வருகிறது கடிவாளம்.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

#BUDGET: சமூக ஊடகங்களுக்கு வருகிறது கடிவாளம்.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
X

தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையில் சில அறிவிப்புகள் பின்வருமாறு...

  • அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சமூக ஊடகங்களில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.
  • காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வானிலை ஆய்வு மையத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் அதிநவீன கருவிகள் வாங்கப்படும்.
  • ஒன்றிய, மாநில நிதி உறவுகளை வழிநடத்த சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.
  • நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது

சமூக ஊடகங்கள்

  • தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது திமுக அரசு பொறுப்பேற்றது. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியதுடன் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியது.
  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதல்வரின் செயல்பாட்டிற்கான அங்கீகாரம்.முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.

secretariate

  • தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது. 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது.
  • தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16%-ல் இருந்து 3.08%ஆக குறையும்.
  • தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.
  • உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்.தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

newstm.in

Next Story
Share it