மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் தீ - விலங்குகள் தவிப்பு
குரங்கணி காட்டுத்தீ விபத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழகத்திற்கு பாடம் கற்பித்த விபத்து அது. அதன்பிறகு காட்டுத்தீ ஏற்படாதவாறு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கணி காட்டுத்தீ விபத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழகத்திற்கு பாடம் கற்பித்த விபத்து அது. அதன்பிறகு காட்டுத்தீ ஏற்படாதவாறு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தேனி பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையின் 33 சதவீதம் தேனி மாவடத்தில் தான் உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் கூடலூர், மேகமலை, தேவாரம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மலைகளில் தீப்பற்றி எரிகிறது. காட்டுத்தீயின் காரணமாக, வனவிலங்குகள் காட்டில் இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து வருகின்றன. தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

