Theme Check

கத்தியுடன் பஸ் டே கொண்டாட்டம்!! மாணவர்கள் அட்டகாசம்!!

புதிய பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அரசு பேருந்தில் கேக் வெட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்குள் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் கத்தியுடன் உள்ளே வந்ததை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கத்தியுடன் பஸ் டே கொண்டாட்டம்!! மாணவர்கள் அட்டகாசம்!!
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பஸ் டே கொண்டாட்டத்தின் போது மாணவர்கள் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதிய பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அரசு பேருந்தில் கேக் வெட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்குள் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் கத்தியுடன் உள்ளே வந்ததை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கத்தியுடன் பஸ் டே கொண்டாட்டம்!! மாணவர்கள் அட்டகாசம்!!
அங்கு விரைந்து வந்த செங்கம் காவல்துறையினர் ஐந்து நபர்களையும் பிடிக்க முயன்றபோது அதில் இருவர் தப்பி ஓடி விட்டனர். மூன்று பேர் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள், ஆடையூர் பகுதியை சேர்ந்த விஜய், தமிழ் மற்றும் அவர்களுடைய நண்பர் என தெரியவந்தது. அவர்களுடன் வந்த வாத்துமுருகன், ஆரோக்கியராஜ் ஆகிய இருவரும் தப்பிவிட்டனர். அவர்கள் இருவரும் கொலைவழக்கில் சம்பந்தபட்டவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கத்தியுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Tags:
Next Story
Share it