பஸ் கட்டணம் 10 ரூபாய் உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு..!
பஸ் கட்டணம் 10 ரூபாய் உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு..!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீசல் விலை உயர்வின் காரணமாக பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஆந்திர மாநில அரசு சாலைப் போக்குவரத்துக் கழக இயக்குநர் துவாரகா திருமலா ராவ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
“கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திர மாநில அரசுப் பேருந்து கழகம் பல நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. தினசரி சுமார் 61 லட்சம் பேர் தங்கள் இடங்களை அடைய ஆந்திர மாநில அரசுப் பேருந்து உதவுகிறது. ஆனால், டீசல் விலை ஏறக்குறைய 60 சதவீதம் உயர்ந்து, இரண்டு ஆண்டுகளில் ரூ.5,680 கோடி வருவாய் குறைந்துள்ளது.

எனவே, நஷ்டத்தை தாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால், மாநில பொதுப் போக்குவரத்துக் கழகம் பல்லே வெளுகு (Palle Velugu) பேருந்துகளுக்கு டீசல் செஸ் 2 ரூபாயும், எக்ஸ்பிரஸ் சேவை பேருந்துகளுக்கு 5 ரூபாயும், உயர்நிலை (ஏசி) பேருந்துகளுக்கு 10 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது, முழுக்க முழுக்க டீசல் மீது விதிக்கப்படும் செஸ் கட்டணமே; டிக்கெட்டுக்கானவை அல்ல. இதன்மூலம் ஆர்.டி.சிக்கு ரூ.720 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும் ஆர்.டி.சி சரக்கு சேவைகள் மூலமும் வருவாயை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

