பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து : சுரங்கத் தொழிலாளர்கள் 27 பேர் பலி..!
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து : சுரங்கத் தொழிலாளர்கள் 27 பேர் பலி..!

பெரு நாட்டின் தெற்கு பகுதியில், பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அயாகுசோ நகரில் இருந்து ஆரிகுப்பா நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயணம் செய்தனர்.

அதிகாலை 3 மணியளவில் அந்த பஸ் பெருவியன் என்ற பகுதியில் சென்றபோது, திடீரென 250 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பயணம் செய்த 27 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு நாஸ்கா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடி விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதுபற்றி பெருவியன் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

