Theme Check

பட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுடி பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவருக்கு சிக்கல்

பட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுடி பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவருக்கு சிக்கல்

பட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுடி பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவருக்கு சிக்கல்
X

சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர், ரவுடி பினு ஸ்டைலில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் கமல் (26). இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பயின்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். ஆனால் தற்போது அந்த கொண்டாட்டமே அவருக்கு வினையாக வந்துள்ளது. பிறந்தநாள் கொண்டாடிய கமல், நடுரோட்டில் நீளமான பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டினார்.

பட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுடி பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவருக்கு சிக்கல்

பண மாலை, மலர்க்கிரீடம் என அமர்க்களப்படுத்தினார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தை செல்போனில் படம் பிடித்த அவரது நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையறிந்து அவர் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it