Theme Check

வீட்டில் மகிழ்ச்சி நிலவ தினமும் இதைச் செஞ்சு வாங்க!!

ஏதோ ஒரு துர்சக்தி நம்மை அனுபவிக்க விடாமல், அழுத்தததை உண்டு பண்ணும் இந்தப் பிரச்சனையை எப்படி சரி பண்ணலாம்.?வீட்டிலேயே எளிமையான பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும்.பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து,சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.அவரவர் குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு, ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் கல் உப்பை அதில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். உப்புத் தண்ணீர் நிரப்பப்பட்ட அந்த கண்ணாடி டம்ளரை இறைவனின் முன்பு வைத்து, நம் மனதில் இருக்கும் வாய்விட்டுச் சொல்ல வேண

வீட்டில் மகிழ்ச்சி நிலவ தினமும் இதைச் செஞ்சு வாங்க!!
X

தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான வீடுகளில் பணவரவு இருந்தாலும் வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் , திருப்தியும் ஏற்படுவதில்லை.
நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஆடை, ஆபரணங்கள், ஆடம்பரங்கள் என அனைத்தையும் வாங்கி விடுகின்றொம்.ஆனால் வீட்டில் வெறுமையும், எதையோ இழந்தது போன்ற மனநிலையும் மாறுவதில்லை. எல்லாம் இருந்து இல்லாத வெறுமை.மனதில் மகிழ்ச்சி இன்மை.
அல்லது வீட்டில் இருக்கும் வாரிசுக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ திருமணமாகாமல் அல்லது குழந்தை பிறக்காமல் இப்படி எதோ ஒரு தீராத குறையும், மன அழுத்தமும் இருக்கும்.

வீட்டில் மகிழ்ச்சி நிலவ தினமும் இதைச் செஞ்சு வாங்க!!


ஏதோ ஒரு துர்சக்தி நம்மை அனுபவிக்க விடாமல், அழுத்தததை உண்டு பண்ணும் இந்தப் பிரச்சனையை எப்படி சரி பண்ணலாம்.?வீட்டிலேயே எளிமையான பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும்.பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து,சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.அவரவர் குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு, ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் கல் உப்பை அதில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். உப்புத் தண்ணீர் நிரப்பப்பட்ட அந்த கண்ணாடி டம்ளரை இறைவனின் முன்பு வைத்து, நம் மனதில் இருக்கும் வாய்விட்டுச் சொல்ல வேண்டும்.


அந்தக் கண்ணாடி டம்ளரை எடுத்து வீட்டின் தென் மேற்கு மூலையில் மரப்பலகை அல்லது ஒரு காகித அட்டை மீதோ வைத்துவிட வேண்டும்.
மறுபடியும் மறுநாள் எழுந்து குளித்து முடித்துவிட்டு தென்மேற்கு மூலையில் வைத்த அந்தப் பழைய தண்ணீரை துளசிச் செடிக்கோ ,வீட்டிற்கு வெளியேயோ கொட்டி விட வேண்டும்.நம் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத அனைத்து துர்சக்திகளும் அந்த தண்ணீரின் மூலமாக வெளியே சென்றுவிடும். கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைவதை கண்கூடாகக் காண முடியும். தினசரி இந்த வழிபாட்டை மனப்பூர்வமாக செய்து வர மனக் கஷ்டம், பணக் கஷ்டம் எதுவாக இருப்பினும் விரைவில் நீங்கி எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும்.

newstm.in

Tags:
Next Story
Share it