இந்திய அளவில் சி.ஏ. தேர்வில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்! குவியும் பாராட்டு!
இந்திய அளவில் சி.ஏ. தேர்வில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்! குவியும் பாராட்டு!

சிஏ தேர்தவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சேலம் மாணவர் இசக்கிராஜ் சாதனை படைத்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்ன முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்.
இசக்கிராஜின் தந்தை தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார் சேலத்தில் உள்ள சார்ட்டட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட்டில் இசக்கிராஜ் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிஏ தேர்வு எழுதினார்.

இதில் 800 மதிப்பெண்ணுக்கு 553 மதிப்பெண்கள் பெற்று அவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் அவரது குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. அவருக்குப் பெற்றோர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு முதலே சிஏ தேர்வுக்கு பெற்றோர் தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்தனர் என்று கூறும் இசக்கிராஜ், இந்திய அளவில் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை என கூறியுள்ளார்.
இசக்கிராஜுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் மகிழச்சியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

