அமைச்சரவை மாற்றம்.. அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா..!
அமைச்சரவை மாற்றம்.. அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா..!

ஒடிசாவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 20 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சட்டப் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளனர்.
ஒடிசாவில், ஆளும் பிஜு ஜனதா தளம் மே 29-ம் தேதியுடன் தனது ஐந்தாவது பதவிக் காலத்தின் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக மாநிலத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.
இதையடுத்து, நாளை (5-ம் தேதி) காலை 11.45 மணிக்கு ராஜ்பவன் மாநாட்டு மண்டபத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். பிரதீப் அமித் மற்றும் லத்திகா பிரதான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கியமாக, 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்தவும், புத்துயிர் கொடுக்கவும் ஒரு முக்கிய முயற்சியாக இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு கருதப்படுகிறது.
நேற்று வெளியான இடைத்தேர்தலில் முடிவில், ஒடிசா மாநிலம் பிரஜ் ராஜ் நகரில் பிஜு ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்ட கிஷோர் குமார் மொஹந்தியின் மனைவி அலகா மோஹந்தி 93,953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

