Theme Check

வந்தாச்சு புது மொபைல் ஆப்...இனி நீங்களே மின் கட்டணத்தை கணக்கிடலாம்...

வந்தாச்சு புது மொபைல் ஆப்...இனி நீங்களே மின் கட்டணத்தை கணக்கிடலாம்...

வந்தாச்சு புது மொபைல் ஆப்...இனி நீங்களே மின் கட்டணத்தை கணக்கிடலாம்...
X

தமிழக மின் வாரியம் சார்பில், செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்ய கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு சோதனை முறைகள் தொடங்க மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியை கைபேசியில் டவுன்லோட் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம்.

செல்போன் செயலியில் மின் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது மற்றும் குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு செல்போன் செயலிகள் வழங்கப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தால், தமிழகம் முழுவதும் இனி செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it