மேகியுடன் யாராவது இதை சாப்பிடுவாங்களா ? பான் மசாலா உடன் கலந்தடிக்கும் இளைஞர்..!!
மேகியுடன் யாராவது இதை சாப்பிடுவாங்களா ? பான் மசாலா உடன் கலந்தடிக்கும் இளைஞர்..!!

இணையதளங்களில் நடைபெறும் வித்தியாசமான உணவு போட்டிகளில் தங்களை தனித்துக் காட்ட எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தூரைச் சேர்ந்த ரோஹித் சௌஹான் என்ற இளைஞர், தனது விருப்பமான உணவு எனக் கூறி நூடுல்ஸ் உடன் பான் மசாலாவை கலக்கிச் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பான் மாசாலா காரணமாகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதால் அதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதில் பான் மசாலா கலந்த நூடுல்ஸை ரோஹித் சௌஹான் ரசித்து ருசித்து உண்பதும் தெளிவாகத் தெரிகிறது.

