Theme Check

மாதவிடாய் காலங்களில் கொரோனா தடுப்பூசி போடலாமா? நீதி ஆயோக் விளக்கம் !!

மாதவிடாய் காலங்களில் கொரோனா தடுப்பூசி போடலாமா? நீதி ஆயோக் விளக்கம் !!

மாதவிடாய் காலங்களில் கொரோனா தடுப்பூசி போடலாமா? நீதி ஆயோக் விளக்கம் !!
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மக்கள் பலரும் ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுவருகின்றனர். அதேநேரத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வகையான தகவல்கள் இணையத்தில் உலாவுகின்றன.

இந்த நிலையில், மாதவிடாய் காலங்களிலும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளலாம் என்று நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அப்போது விளக்கம் அளித்தார்.

மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்னையும் ஏற்படவாய்ப்பில்லை. மாதவிடாயை காரணமாகக் கூறி தடுப்பூசி போட்டுக்கொள்வதை தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it