வாட்ஸ்அப் மூலம் இப்போது இதை யூஸ் பண்ண முடியுமா? - புதிய அப்டேட்டால் உற்சாகம் !!
வாட்ஸ்அப் மூலம் இப்போது இதை யூஸ் பண்ண முடியுமா? - புதிய அப்டேட்டால் உற்சாகம் !!

பிரபலக் குறுஞ்செய்து சேவை செயலி வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த செயலியில் தொடர்ந்து புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னால் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது கணினி மூலம் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, செல்போனில் மட்டும் உள்ள வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே வீடியோ, வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி இருந்தது.
இனி கணினி, மடிக்கணினியிலும் இந்த சேவைகளைப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக அந்த நிறுவனம் கூறுகையில், வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளப்படும் அழைப்புகளை யாரும் இடைமறித்து கேட்க முடியாதபடி இருமுனைகளிலும் மறையாக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, செல்போன் மற்றும் கணினி என எதில் அழைப்புகளை மேற்கொண்டாலும் யாரும் ஊடுருவித் தெரிந்து கொள்ள முடியாது.
இப்போதைய நிலையில், கணினி, லேப்டப்பில் இருவா் மட்டுமே பேசிக் கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அழைப்புகளின் தரம் சிறப்பாக இருக்கும். பலரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் ‘கான்பரன்சிங்’ வசதி அளிக்கப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் இந்த வசதியை அளிப்போம்.
கடந்த ஓராண்டில் வாட்ஸ்அப் மூலம் அழைப்புகளை மேற்கொள்வது பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவேதான், இப்போது அந்த வசதியை கணினியிலும் அளிக்கிறோம். வீடியோ அழைப்பை மேற்கொள்ள கணினியின் மைக்ரோஃபோன், காமீரா ஆகியவற்றை வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொள்ள பயனா்கள் அனுமதிக்கும் பட்சத்தில் இந்த சேவையைப் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது
newstm.in