Theme Check

சிமெண்ட் கம்பத்தை அகற்றாமல் கால்வாய்... சர்ச்சையில் சிக்கிய ஒப்பந்ததாரர்!!

சிமெண்ட் கம்பத்தை அகற்றாமல் கால்வாய்... சர்ச்சையில் சிக்கிய ஒப்பந்ததாரர்!!

சிமெண்ட் கம்பத்தை அகற்றாமல் கால்வாய்... சர்ச்சையில் சிக்கிய ஒப்பந்ததாரர்!!
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிமெண்ட் மின் கம்பத்தை அகற்றாமல் அதன் மீதே ஒப்பந்ததாரர் கால்வாய் கட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

35ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆம்பூர் நகராட்சி சார்பில் கால்வாய் மற்றும் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் பெத்தலேகம் 4ஆவது தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் போது தெருவில் இருந்த சிமெண்ட் மின்சார கம்பங்களை அகற்றாமல் அதோடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

ambur

வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்து சிமெண்ட் சாலை போட்டது. அதே போல் இரு தினங்களுக்கு முன்பு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் உடன் சேர்த்து தார் சாலை போடப்பட்டது.

bike road1

அந்த வரிசையில் தற்போது ஆம்பூர் பகுதியில் சிமெண்ட் மின்சார கம்பங்களை அகற்றாமல் அதன்மீது கழிவுநீர் கால்வாய் போடப்பட்டுள்ள நிகழ்வு பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it