Theme Check

தேர்வு ரத்து... சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விளக்கம் !!

தேர்வு ரத்து... சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விளக்கம் !!

தேர்வு ரத்து... சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விளக்கம் !!
X

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு அடியோடு மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் அண்மையில் கொரோனா தொற்று குறைந்துவந்தப்போது படிப்படியாக திறக்கப்பட்டு வந்தது. அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மே 4ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று முன்பைவிட அதிகமாக பரவி வருவது பெரும் சவாலையும் அச்சுறுத்தலையும் உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்முடிவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தேதி அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் என கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக தற்போது மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:- மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். உள் மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை எனில் அந்த மாணவர்கள், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் தேர்வு எழுதலாம். இதற்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும் என அவர் கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it