உயிரிழப்பை ஏற்படுத்தும் கேண்டிட் ஆரிஸ் தொற்று: அமெரிக்காவில் பதற்றம்..!
உயிரிழப்பை ஏற்படுத்தும் கேண்டிட் ஆரிஸ் தொற்று: அமெரிக்காவில் பதற்றம்..!

அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மருத்துவமனைகளில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை தொற்று பரவி வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேண்டிடா ஆரிஸ் என்கிற இந்த பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வீரியத்தை பெற்றதாகும். அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி இதுவரை வாஷிங்டனி, 101 பேருக்கு கேண்டிடா ஆரிஸ் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து டல்லாஸ் மாகாணத்தில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது., நியூயார்க்கில் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி காப்பாற்றபப்ட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், இது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது. காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை கேண்டிடா ஆரிஸ் நோய்த்தொற்றின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும். சமீபத்திய காலங்களில் இவை ஏன் தொற்றுநோய்களை ஏற்படுத்தத் தொடங்கின என்பதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

