கைதிகளுக்கு கஞ்சா சப்ளை.. தலைமை சிறை வார்டன் மீது பாய்ந்த நடவடிக்கை !!
கைதிகளுக்கு கஞ்சா சப்ளை.. தலைமை சிறை வார்டன் மீது பாய்ந்த நடவடிக்கை !!

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில், சிறை காவலர்கள் அடங்கிய குழுவினர் இரவு திடீரென சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு சிறை வளாகம், அறைக்கும் சென்று கைதிகளின் உடைகளை உள்ளிட்டவற்றையும் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தண்டனை கைதிகள் இருந்த தொகுதியில் 150 கிராம் கஞ்சாவும், செல்போன் பேட்டரி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா பறிமுதல் செய்தது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது. மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளபோதும், அதனையும் மீறி கஞ்சா, செல்போன் பேட்டரி உள்ளே வந்தது எப்படி என அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், தலைமை சிறை வார்டர் விஜயகுமார் மூலம் கஞ்சா, செல்போன் பேட்டரி கைதிகளுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அப்துல் ரகுமான் உத்தரவிட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் செல்போன் பேட்டரி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை சிறை வார்டர் விஜயகுமார் தொடர்ச்சியாக இதுபோன்று கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தாரா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
newstm.in

