Theme Check

புத்தாண்டு முதல் உயர்கிறது கேன் வாட்டர் விலை.. மக்கள் அதிர்ச்சி !

புத்தாண்டு முதல் உயர்கிறது கேன் வாட்டர் விலை.. மக்கள் அதிர்ச்சி !

புத்தாண்டு முதல் உயர்கிறது கேன் வாட்டர் விலை.. மக்கள் அதிர்ச்சி !
X

பெரு நகரங்களில் வாட்டர் கேன் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அதாவது கிட்டதட்ட குடிநீர் வர்த்தகம் என்ற நிலையை எட்டிவிட்டது. இந்த நிலையில், புத்தாண்டு முதல் வாட்டர் கேன்களின் விலை குறிப்பிட்ட சில இடங்களில் உயரவுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸை சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், அடைக்கப்பட்ட குடிநீர் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வால், 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாக்ஸ்களின் மீது புத்தாண்டு முதல் ரூ. 10 உயர்த்தப்படும் என்றும், 20 லிட்டர் கேன் ஃபில்லிங் மீது ரூ. 2 உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

s

அதாவது, குடிநீர் கேன்கள் இருக்கும் பெட்டி ஒன்றுக்குத்தான் ரூ. 10 வரை உயர்த்தப்படும் என்று உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதைப் பார்த்து விட்டு, வர்த்தகர்கள் கேனுக்கு விலை உயர்த்தி, பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தி விடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

water



பெரு நகரங்களில் வாட்டர் கேன் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அதாவது கிட்டதட்ட குடிநீர் வர்த்தகம் என்ற நிலையை எட்டிவிட்டது. வாட்டர் கேன் தொழிலில் இன்றைக்கு ஏராளமானோர் வாகனங்களுடன் இறங்கியுள்ளனர். இதனால் தமிழக அரசு குடிநீர் விற்பனை விவகாரத்தில் உரிய முடிவு எடுக்குமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


newstm.in

Next Story
Share it