Theme Check

இனிமே இந்த டோல்கெட்ல ஃப்ரீயா போக முடியாது.. காசுதான்..

கடந்த மாதம் 26 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் இருந்த டோல்கெட் பயணிகளால் சூறையாடப்பட்டது நினைவிருக்கிறதா. இதனால் அன்று முதல் இன்றுவரை அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. தற்போது டோல்கெட் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துவிட்டதால் நாளை முதல் (மார்ச் -1) கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பலகையை வைத்திருக்கிறது.

இனிமே இந்த டோல்கெட்ல ஃப்ரீயா போக முடியாது.. காசுதான்..
X

கடந்த மாதம் 26 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் இருந்த டோல்கெட் பயணிகளால் சூறையாடப்பட்டது நினைவிருக்கிறதா. பேருந்து ஓட்டுநருக்கும் சுங்கசாவடி ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறில்வாகனங்கள் வரிசை கட்டி நிற்க கொதித்தெழுந்த பயணிகள் டோல்கெட்டை சூறையாடி விட்டார்கள். இதனால் அன்று முதல் இன்றுவரை அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. தற்போது டோல்கெட் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துவிட்டதால் நாளை முதல் (மார்ச் -1) கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பலகையை வைத்திருக்கிறது.

இனிமே இந்த டோல்கெட்ல ஃப்ரீயா போக முடியாது.. காசுதான்..

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்து, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால், ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஓட்டுனர் சுங்கச்சாவடியின் குறுக்கே அரசுப் பேருந்து நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன.நெரிசலில் நின்றிருந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகள், அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நெறுக்கி சூறையாடியனர். இதனையடுத்து தகவல் அறிந்து போலீசார் கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். சுங்கச்சாவடியை சீரமைக்காததால் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் எந்தவித கட்டணமும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

நாளை முதல் (மார்ச் -1)தேதி முதல் சுங்கசாவடி கட்டணம் வசூலிக்கபடும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற பிரச்னைகளை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it