#BREAKING:- நள்ளிரவில் கார் விபத்து.. திமுக எம்எல்ஏ மருத்துவமனை.

#BREAKING:- நள்ளிரவில் கார் விபத்து.. திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி..!

#BREAKING:- நள்ளிரவில் கார் விபத்து.. திமுக எம்எல்ஏ மருத்துவமனை.
X

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்தியூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு ரயில் நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் லேசான மழை பெய்துகொண்டிருந்தது. ஏ.ஜி.வெங்கடாசலத்தின் கார் வாய்க்கால் பாளையம் என்ற இடத்துக்கு அருகில் வந்தபோது நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
Andhiur MLA near Bhavani, Erode District. He was seriously injured in an  accident in which the car he was traveling to Venkatachalam overturned. |  பவானி அருகே கார் கவிழ்ந்து விபத்து: அந்தியூர் எம்எல்ஏ ஏ ...
இதில் காயமடைந்த டிரைவர், எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெங்கடாசலத்துக்கு நெஞ்சு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story
Share it