ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன கார்!!
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன கார்!!

1955ஆம் ஆண்டின் மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் கார் ஜெர்மனியில் நடந்த ஏலத்தில் ரூ.1100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
மே 5 அன்று ஜெர்மனியில் நடந்த ரகசிய ஏலத்தில் 1955 ஆம் ஆண்டு மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் கார் 135 மில்லியன் யூரோக்களுக்கு (1,100 கோடி ரூபாய்) விற்கப்பட்டது என்பதை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன தலைவர் ஒலா கல்லீனியஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 1962 ஆம் ஆண்டின் ஃபெராரி 250 GTO கார் $48.4 மில்லியனுக்கு ஏலம் போனது முந்தைய சாதனையாக இருந்தது என்று கனடாவை தளமாகக் கொண்ட ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் அருங்காட்சியகத்தில் மே 5 அன்று நடந்த ரகசிய ஏலத்தின் போது இந்த சாதனை விற்பனை நடந்தது. மிகவும் அரிதான அம்பு வடிவ கூபே வகை வாகனமான இது இதுவரை தயாரிக்கப்பட்ட இரண்டு வகை கார்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

