Theme Check

#BREAKING:- லாரி மோதி நொறுங்கிய கார்.. குழந்தை உள்பட 10 பேர் பலியான சோகம் !!

#BREAKING:- லாரி மோதி நொறுங்கிய கார்.. குழந்தை உள்பட 10 பேர் பலியான சோகம் !!

#BREAKING:- லாரி மோதி நொறுங்கிய கார்.. குழந்தை உள்பட 10 பேர் பலியான சோகம் !!
X

ஆனந்த் நகர் அருகே காலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் இந்திரானஜ் கிராமத்துக்கு அருகே காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த 10 பேர் உயிரிழந்தனர்.


ஆனந்த் மாவட்டத்தின் தாராபூர் - அகமது மாவட்டம் வடமான் பகுதியை இணைக்குமிடத்தில் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. மிக வேகமாக வந்த டிரக், கார் மீது மோதியதில், காரில் இருந்த குழந்தை உள்பட 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நெருங்கியது. இதனால் காரில் சிக்கிய உடல்களை பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்புகுழுவினர் மீட்டனர். இதனையடுத்து தற்போது உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it