Theme Check

காரை விழுங்கிய திடீர் பள்ளம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

காரை விழுங்கிய திடீர் பள்ளம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

காரை விழுங்கிய திடீர் பள்ளம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
X

மும்பையில், பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு பகுதியான காட்கோபரில் உள்ள ராம் நிவாஸ் சோஷைட்டி எனும் பகுதியில் இருந்த கிணற்றை, கான்கிரீட் தளம் கொண்டு மூடியுள்ளனர்.இதனையடுத்து, அங்குள்ள குடியிருப்புவாசிகள் அந்த இடத்தை கார் பார்க்கிங்காக பயன்படுத்தி வந்துள்ளனர். மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கிணற்றில் நீர் ஊற்று எடுத்துள்ளது.

இந்நிலையில், அரைகுறையாக போடப்பட்ட கான்கிரீட் தளம் சேதமடைந்து அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

நல்லவேளையாக இந்த விபத்து நடந்தபோது காருக்குள் யாரும் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அங்கிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.


Tags:
Next Story
Share it