இரு லாரிகளுக்கு இடையே சிக்கிய கார்.. கணவன், மனைவி, மகள், தாய் என 4 பேரும் உயிரிழப்பு !!
இரு லாரிகளுக்கு இடையே சிக்கிய கார்.. கணவன், மனைவி, மகள், தாய் என 4 பேரும் உயிரிழப்பு !!

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் கரூரில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய நான்கு பேருடன் சொந்த ஊரான சீர்காழி நோக்கி காரில் சென்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே வரும்போது கார், முன்னால் சென்ற ஈச்சர் வாகனத்தின் மீது மோதி நின்றுள்ளது. இதில் அனைவரும் லேசான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த வினாடியே பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் கார் முன்னால் நின்ற ஈச்சர் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது.

இதில், முனியப்பன் அவரது மனைவி, தாய், மகள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 வயது மகன் கார்முகில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவன் கார்முகிலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த மங்களமேடு போலீசார் ஈச்சர் வாகனத்தின் அடியில் சிக்கிய காரை அகற்றி காரினுள் உயிரிழந்து கிடந்த நான்கு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

