Theme Check

காருக்குள் கதறிய சிறுமி.. எம்எல்ஏ மகன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

காருக்குள் கதறிய சிறுமி.. எம்எல்ஏ மகன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

காருக்குள் கதறிய சிறுமி.. எம்எல்ஏ மகன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!
X

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சொகுசு காருக்குள் வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சிறுமி திரும்பிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பலாத்கார சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் எம்எல்ஏவின் மகனும் உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். எம்எல்ஏவின் மகனும் சிறுபான்மை வாரியத் தலைவரும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் சிறுமியுடன் இருந்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Next Story
Share it