Theme Check

சாதி ரீதியாக விமர்சனம்.. மாணவிகளுக்கு நடந்த கொடூரம்.. பள்ளி தலைமை ஆசிரியை கீதா கைது !

சாதி ரீதியாக விமர்சனம்.. மாணவிகளுக்கு நடந்த கொடூரம்.. பள்ளி தலைமை ஆசிரியை கீதா கைது !

சாதி ரீதியாக விமர்சனம்.. மாணவிகளுக்கு நடந்த கொடூரம்.. பள்ளி தலைமை ஆசிரியை கீதா கைது !
X

பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்து சாதி பெயரை சொல்லி திட்டிய தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கீதா என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.

பல முறை கூறியும் தலைமை ஆசிரியர் கேட்காமல் பட்டியலின மாணவிகளை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகளின் புகாரையடுத்து திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ரமேஷ் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதாவிடமும் புகார் கூறிய மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

school
பின்னர் இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ரமேஷிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் நடந்த நிகழ்வுகளை கூறியுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியை கீதாவை அழைத்து மாணவிகள் முன்னிலையில் ரமேஷ் விசாரணை மேற்கொண்டார்.

மாணவிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்ததையடுத்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
keetha
இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று தலைமை ஆசிரியை கீதா கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டாலும் இதுபோன்று வேறு எங்கும் நடக்காத வகையில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.


newstm.in


Next Story
Share it