Theme Check

சிபிஎஸ்இ பள்ளிக்கு சீல்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்..!

சிபிஎஸ்இ பள்ளிக்கு சீல்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்..!

சிபிஎஸ்இ பள்ளிக்கு சீல்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்..!
X

திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதனால், அந்த சிபிஎஸ்இ பள்ளி மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள், நேற்று மாலை பள்ளிக்கு சீல் வைத்தனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட சிபிஎஸ்இ பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 5.22 லட்சம் வரி நிலுவையில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் பள்ளிக்கு அளிக்கப்பட்டும் பள்ளி நிர்வாகம் வரியை செலுத்த முன்வரவில்லை.

இதனால், நகராட்சி ஆணையர் ஷகிலா தலைமையில் அந்தப் பள்ளிக்குச் சென்ற பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அந்தப் பள்ளிக்கு சீல் வைத்தனர்’ என்று தெரிவித்தனர்.

Next Story
Share it