Theme Check

மயானத்தில் 8 சிசிடிவி கேமரா! இறந்தவர்களின் சடங்குகளை உறவினர்கள் பார்க்க ஏற்பாடு!!

மயானத்தில் 8 சிசிடிவி கேமரா! இறந்தவர்களின் சடங்குகளை உறவினர்கள் பார்க்க ஏற்பாடு!!

மயானத்தில் 8 சிசிடிவி கேமரா! இறந்தவர்களின் சடங்குகளை உறவினர்கள் பார்க்க ஏற்பாடு!!
X

மகாராஷ்டிரா மாநிலத்தில் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் கடைசியாக பார்க்க வசதியாக மயானத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உயரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் தொற்றால் உயிரிழப்பவர்களை அவர்களது உறவினர்கள் பார்க்க கூட முடியாத சூழல் நிலவுகிறது.

தொற்று பரவும் என்பதால் நெகட்டிவ் வருபவர்களின் உடல் மட்டுமே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பாசிட்டிவ் இருப்பவர்கள் அரசு மருத்துவமனை சார்பில் அடக்கம் செய்யப்படுவார்கள். எனவே உறவினர்களின் கவலையை போக்கும் விதமாக மகாராஷ்டிரா மயானத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடில் ஒரு மயானத்தில் எட்டு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு இணைய வசதியும் ஏற்படத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களை குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கடைசியாக பார்க்கும் விதத்தில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நெருங்கிய உறவினர்களை பார்க்கமுடியாதவர்களுக்கு இத்தகையை வசதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தகனத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு, 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தி, இணைய வசதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it